நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை எதிர்பார்ப்பு!

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும்.

 

காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

கடல் நிலை: காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளும் காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

 

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...