நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

 

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்தடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் களு, களனி, கின், நில்வள கங்கைகளை அண்மித்த மற்றும் இருமருங்கிலும் வசிக்கும் மக்கள் அவதானத்து செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.பி.பி சுகீஸ்வர இதனை தெரிவித்துள்ளார்.

 

கங்கைகளை அண்மித்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

இதேவேளை கடும் மழையுடனான வானிலை காரணமாக ஏற்படக் கூடிய வெள்ளப்பெருக்குக்கு மத்தியில் நிவாரணம் வழங்குவதற்காக களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு கடற்படையின் நிவாரணக்குழு அனுப்பபட்டுள்ளதாக கடற்படை விடுத்துள்ள அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக 37 நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...