நாட்டில் 4 வகையான டெங்கு வைரஸ் கண்டுபிடிப்பு!

Date:

டெங்கு வைரஸின் 4 வகைகளும் தற்போது நாட்டில் பரவி வருவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

இதற்கமைவாக டெங்கு வைரஸின் 2 வது மற்றும் 3 வது பிறழ்வுகள் தற்போது அதிகரித்துள்ளன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டெங்கு வைரஸ் வகை 1 நாட்டில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பணியகம், மருத்துவ ஆய்வு நிறுவகம் மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு வைரஸ் பிறழ்வு தொடர்பான ஆய்வு பிரிவு ஆகியன ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் ஊடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்த ஆய்வின் நோக்கம் நாட்டில் பரவும் டெங்கு வைரஸின் வகைகளை அடையாளம் காண்பதாகும்.

 

அத்துடன், இவ்வாறு பரவுகின்ற டெங்கு வைரஸ் வகைகளில் மாற்றம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இந்த ஆண்டில் இதுவரையிலும் 16,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 70 வீதமானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் ஹிமாலி ஹேரத் இதுகுறித்து குறிப்பிட்டார்.

 

தற்போது, நாட்டின் பல மாவட்டங்கள் டெங்கு அனர்த்த வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளன, நாட்டின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கண்டி, மாத்தறை, இரத்னபுரி, கேகாலை, காலி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...