நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்காக புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும், தரம் ஐந்திற்கு கீழ் உள்ள வகுப்புக்களில் கற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இதன் நோக்கமாகும். மக்களுக்கு வசதியான போக்குவரத்து சேவையை வழங்க அரசாங்கம் அற்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் திலும் அமுனுகம மேலும் கூறினார்