மெலிபன் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பூரண நிதி நன்கொடையின் கீழ் சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடம்

Date:

சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் 13 கட்டில்களை கொண்ட தீவிர சிகிச்சை பிரிவை உள்ளடக்கியதாக புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடத்தின் நினைவு பலகை இன்று பிரதமரினால் திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்தக்கட்டிடம், இலவச சுகாதார சேவையின் சிறந்த பிரதிபலன்களை இலங்கை வாழ் மக்களுக்கு கிடைக்க செய்யும் உன்னதமான நோக்கத்தில் E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் பூரண நிதி நன்கொடையின் கீழ் இந்த மூன்று மாடிக் கட்டிடம் நிறுவப்பட்டுள்ளது.

இதற்கான நிதி நன்கொடை வழங்கிய E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் தலைவர் இல்யாஸ் அப்துல் கரீமுடன் பிரதமர் நட்பு ரீதியாக கலந்துரையாடினார்.

குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் S.H.முணசிங்க, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, தேசிய வைத்தியசாலையின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் W.K.விக்ரமசிங்க, E.A.M. மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் தலைவர் இல்யாஸ் அப்துல் கரீம் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...