அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் அடுத்த வாரம் முதல் தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்

Date:

அடுத்த வாரம் முதல் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பமாகும் எனவும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.

“ஒவ்வோர் ஆசிரியருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முறையான திட்டத்தை நாம் உருவாக்கி வருகின்றோம். இந்நாட்டில் சுமார் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர். தவணை ஆரம்பிக்க முன் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என நாம் நம்புகிறோம்” என்றும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...