இந்த வருட ஹஜ் வணக்கத்தை செயல்பாட்டுத்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence ) தொழில்நுட்பத்தின் உதவியுடன இயங்கக் கூடிய ரோபோக்கள் மற்றும் அதிநவீன வாகனங்கள் மூலம் ஹாஜிக்களுக்கு ஜம்ஜம் தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், வயோதிகர் மற்றும் சிறப்பு தேவையுடையவர்கள் மின்சார வாகனங்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட வாகனங்களை APP மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்தும் வசதி மற்றும் சிறிய தொழுகை அறைகள் மற்றும் சிறப்பு கழிவறை பயன்படுத்தும் வசதி
5000த்திற்கும் மேற்பட்ட பணியாட்கள் மூலம் தினமும் 10 முறை பள்ளி வளாகம் சுத்தம் செய்ய ஏற்பாடு, ரோபோ தொழில்நுட்பம் மூலம் கிருமி ஒழிப்பு மற்றும் அனைத்து நுழைவாயில்களிலும் சானிடைசர் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹாஜிகளுக்கு இலவச குடை மற்றும் கிருமிநாசினிகள் வழங்க திட்டம், வெள்ளிக்கிழமை குத்பா மற்றும் அரபா நாள் நிகழ்ச்சிகளை 10 மொழிகளில் மொழிபெயர்த்து 100 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கேட்க ஏற்பாடு மற்றும் அரபா நாள் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரலை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.