ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உலக தலைவர்களின் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ

Date:

2021ற்கான ஊடக சுதந்திரம் குறித்த சர்வதேச அமைப்பான எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தமது பத்திரிகை சுதந்திரத்தை மீறும் பட்டியலில் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை இணைத்துக்கொண்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திரத்தை மீறும் பட்டியலில் எல்லைகள் அற்ற நிருபர் அமைப்பு இலங்கை ஜனாதிபதியை இணைத்துக்கொண்டுள்ளது. பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட உலக தலைவர்களின் படங்களை வெளியிட்டுள்ள எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு அவர்கள் பயன்படுத்தும் முறைகள்இஅவர்களுடைய விருப்பத்திற்குரிய இலக்குகள் மற்றும் அவர்கள் தங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் விதத்தில் வெளியிட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளது. 2021 பட்டியலில் இலங்கை ஜனாதிபதியையும் எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு இணைத்துக்கொண்டுள்ளது.
ஜனாதிபதியின் படத்தை வெளியிட்டுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர் அமைப்பு பயங்கரம் மீண்டும் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சி தமிழ் சிறுபான்மையினத்தவர்கள் அல்லது முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்களின் நிலைகள் குறித்து புலனாய்வுச்செய்திகளை செய்து செய்திகளை என்பது மிகவும் கடினமான ஆபத்தானதாக காணப்படுகின்றது என எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
துணிந்து கருத்துதெரிவிப்பதற்கு முற்படுபவர்கள் இரண்டு வகையான ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர் – ஒன்று நீதித்துறை சார்ந்தது- பொலிஸார் பிடியாணையுடன் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன இஇரண்டாவது உடல்ரீதியிலான அச்சுறுத்தல்கள் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்படலாம் என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர் அமைப்பு முறைப்பாடு செய்யப்பட்டாலும் பொலிஸார் அந்த முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் இலங்கையை அதன் வரலாற்றில் மோசமான இருள்படிந்த காலங்களிற்கு கொண்டுவந்துள்ளது என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சி பத்திரிகையாளர்களுக்கு பழைய அச்சங்களை உருவாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...