எதிர்வரும் செம்டம்பர் மாதம் இலங்கையுடன் போட்டியிடுவதற்காக தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகைதர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 ஒருநாள் போட்டிகளும் 3 ரி20 போட்டிகளும் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெறுவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.