டெல்டா கொவிட் திரிபு தொடர்பான இரகசிய அறிக்கையொன்று வெளியானது!

Date:

டெல்டா கொவிட் திரிபானது அனைத்து வைரஸ்களை விடவும் கடுமையான நோய் நிலைமைகளை ஏற்படுத்துவதுடன், பெரியம்மை போல எளிதில் பரவக்கூடியது என்றும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

 

பகிரங்கப்படுத்தப்படாத குறித்த ஆய்வறிக்கையில் நகலொன்றை நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

 

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களை போன்றே பூரணமான தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களாலும் இந்த டெல்டா வைரஸ் பரவும் ஆற்றல் காணப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

 

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் மூக்கிலும் தொண்டையிலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களிடையே காணப்படும் அதே அளவு வைரஸை காவிச் செல்வதால் இந்த நிலைமை ஏற்படுவதாக CDC எனப்படும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரோசெல் வலென்ஸ்கி முன்வைத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டெல்டா கொவிட் வைரஸ் திரிபானது சார்ஸ், அம்மை, எபோலா, பெரியம்மை ஆகியவற்றை விட அதிகமாக பரவுகிறது என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

 

இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.617.2 என பெயரிடப்பட்டுள்ள டெல்டா கொவிட் திரிபு வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மேலும் வலுவடைந்துள்ளதாக அமெரிக்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுமார் 35,000 அமெரிக்கர்கள் டெல்டா கொவிட் திரிபால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

 

இருப்பினும், கொவிட் தொற்றால் ஏற்படக்கூடிய பாரதூரமான நோய் நிலைகளில் 90 சதவீதத்தை கொவிட் தடுப்பூசிகள் கட்டுப்படுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...