நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் – ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அறிவிப்பு

Date:

தலிபான்கள் நகரங்களுக்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.

தலைநகர் காபூல் மற்றும் இரண்டு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச துருப்புக்கள் நாட்டிலிருந்து விலகுவதால் கடந்த இரண்டு மாதங்களாக தலிபான் மற்றும் ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கு இடையிலான மோதல் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா துருப்புக்களை திரும்பப் பெற்றதும், எல்லைக் கடப்புகளையும், கிராமப்புறங்களில் உள்ள பிற பிரதேசங்களையும் குறித்த போராளிகள் குழு கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் வன்முறையைத் தடுப்பதற்கும், தலிபான் இயக்கங்களை மட்டுப்படுத்துவதற்கும் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தலிபான்கள் தொடர்ந்து முன்னேறி வருவதால், இந்த வாரம் காந்தஹார் நகரின் புறநகரில் கடுமையான மோதல் இடம்பெற்றது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா வியாழக்கிழமை அப்பகுதியில் போராளி நிலைகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...