அதிபர்,ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும், என பிரதமர் அறிவித்ததை அடுத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் சடலின் கூறுகையில், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைத்தால் சந்தோசமே!
அனால் அவ்வாறு தீர்மானம் எடுக்கப்படும் வரை எமது ஆர்பாட்டங்கள் தொடரும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் சடலின் தெரிவித்தார். மேலும் இன்று குளியப்பிடிய,காலி,கந்தலாய் போன்ற பிரதேசங்களிலும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.