முஸ்லீம் திருமணச் சட்டம் தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Date:

இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் நாட்டிலுள்ள பொதுவான திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு விரும்பினால், அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்கும் சட்ட ஏற்பாடுகளை செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில், நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்தவொன்று காரணமாகவும் எந்தப் பிரசைக்கும் ஓரங்கட்டுதல் ஆகாது என அரசியலமைப்பின் 12 ஆவது சரத்தில் ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் முஸ்லிம் திருமண மற்றும் மணநீக்கச் சட்டத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படும் ஒரு சில ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அவ்வாறான ஏற்பாடுகளை சட்டத்திலிருந்து நீக்குவதற்கான தேவையை பல்வேறு மகளிர் அமைப்புக்கள், முஸ்லிம் சமூகத்தவர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனால், இலங்கைப் பிரஜைகளின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் பொதுச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகத்தவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் மாற்று வழிகளை அவர்களுக்கு வழங்குவது உகந்ததெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாயின், அவர்களுக்கு குறித்த கட்டளைச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வகையில் குடியியல் சட்டக் கோவை மற்றும் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையில் உள்வாங்கப்பட்டுள்ள திருமண வழக்குகள் தொடர்பான நடைமுறைகளைத் திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...