தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொரோனா பரவும் தன்மை 65 வீதத்தால் குறைவு!

Date:

தடுப்பூசி இரண்டையும் ஏற்றிக் கொண்டவர்களின் உடம்பில் கொரோனா வைரசு பரவும் தன்மை 65 வீதத்தால் குறைவாகுமென ஆய்வு ஒன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரியல் சார்ந்த ஆய்வு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவாந்தர மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

88 மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், அவற்றில் 84 டெல்டா வகை தொடர்புடைய மரபணு பகுப்பாய்வாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறினார்.கொழும்பு , மஹரகம ,மாலபே, வவுனியா ,இரத்தினபுரி, கம்பஹா, கண்டி, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஃபியூச்சர் பார்ட்டி’ கலைப்பு: கட்சி அரசியலிலிருந்து விலகுவதாக துருக்கியின் முன்னாள் பிரதமர் அறிவிப்பு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும் 'ஃபியூச்சர் பார்ட்டி' (Future Party) தலைவருமான அகமத்...

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை...

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல்...

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால்...