துருக்கியின் முன்னாள் பிரதமரும் ‘ஃபியூச்சர் பார்ட்டி’ (Future Party) தலைவருமான அகமத் தாவூதோக்ளு (Ahmet Davutoğlu), கட்சி அரசியலில் இருந்து விலகுவதாகவும், தனது கட்சியின் அரசியல் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்து கட்சியைக் கலைப்பதாகவும் அறிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், நாட்டின் “மாசுபட்ட அரசியல் சூழலுக்கு” எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கை அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதைக் குறிக்கவில்லை என்றும், அரசியல் நடைமுறைகள் குறித்து அனைவரும் மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அழைப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
கட்சி அமைப்புக்கு அப்பாற்பட்டு துருக்கி நாட்டிற்காகத் தொடர்ந்து பணியாற்றப்போவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
