1990 சுவ செரிய அறக்கட்டளை, மோட்டார் சைக்கிள் மூலமான அவசர மருத்துவ சேவையொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை விரைவாக சென்றடைவதற்காக இச்சேவை திட்டமிடப்பட்டுள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரப் பகுதிகள் மற்றும் வீதித் தடைகள் உள்ள பகுதிகளில் இச்சேவை செயற்படுத்தப்படும்.
ஆம்புலன்ஸ் வந்து சேருவதற்கு முன்னர், நோயாளிக்கு விரைவாக முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவச் சிகிச்சையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என சுவ செரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.
இத்திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களைக் இலக்காகக் கொண்டு இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
