தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது

Date:

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும், அனுமதியின்றி மாகாண எல்லைகளை கடக்க முற்பட்ட 361 வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் சிலர் மாகாண எல்லைகள் வரையில், பஸ்களில் பயணித்து, பின்னர் அங்கிருந்து நடைபாதையாக சென்று, வேறு பஸ்களின் மூலம் சிலர் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால், குறித்த பஸ் உரிமையாளர், சாரதி, நடத்துநர் உட்பட தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், குறித்த பஸ்ஸை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

அதேபோல், தொடர்ந்தும் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...