நாட்டின் அனைத்து சுற்றுலா வலயங்களிலும் உள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும்!

Date:

நாட்டின் அனைத்து சுற்றுலா வலயங்களில் உள்ள அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்யுமாறு ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நெடுஞ்சாலை அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு. பிரேமசிரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று (15) நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

சுற்றுலாத் துறையின் ஊடாக எமது நாடு அதிக அளவில் அந்நிய செலாவணியைப் பெறுகிறது. சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும். சுற்றுலாத் துறையை மேம்படுத்ததுவதாக இருந்தால் உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். அனைத்தும் இலவசமாக அருகில் வரும் வரை காத்திருக்க முடியாது. நாம் பல வருடங்கள் முன்னோக்கி சிந்தித்து செயற்பட வேண்டும். எமது நாடு மிகவும் அழகான நாடு. இது முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அழகிய சூழல்கள், கடற்கரைகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் மத ஸ்தலங்கள் நிறைந்த நாடு. மேலும், பல்வேறு காலநிலை வலயங்கள் உள்ளன. சில மணிநேரங்களில் வெவ்வேறு காலநிலை வலயங்களின் அனுபவத்தை பெற முடியும். உலகின் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட இடங்களில் ஒன்றாக எமது நாடு காணப்படுகிறது.

நாம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டுமானால் தேவையான வசதிகளை வழங்க வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். இவை எங்களை பற்றி சிந்தித்து செய்யும் பணிகளல்ல. எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தே செயற்பட வேண்டும். எனவே, சுற்றுலா வலயங்களில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பிரேமசிறி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...