நாளை முதல் சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும்- ஜானக வக்கும்புர!

Date:

சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக நாளை முதல் ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள், ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

லங்கா சீனி நிறுவனத்தின் ஊடாகவும் சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாகவும் சீனியை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது சகல சதொச விற்பனை நிலையங்களுக்கும் சீனியை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த பயங்கர...

நேட்டோ மாநாடு: ஸெலன்ஸ்கி மற்றும் சிரிய ஜனாதிபதி அல்-ஷராவைச் சந்திக்கிறார் டொனால்ட் டிரம்ப்!

துருக்கியில் இந்த வாரம் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சி மாநாட்டின் இடையே,...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் வன்முறை: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த பயங்கர மோதலில்,...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்: கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு!

இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே இன்று காலை...