பாணந்துறை போதனா வைத்தியசாலையில் சரீரங்களை கையளிப்பதில் ஏற்பட்ட சிக்கல்!

Date:

கடந்த 21ம் திகதி பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 2 சரீரங்கள் மாறுபட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 89 மற்றும் 93 வயதுகளையுடைய இரண்டு பெண்கள் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்தார். அவரது சரீரத்திற்கு பதிலாக பாணந்துறை பகுதியை சேர்ந்த 93 வயதுடைய பெண்ணின் சரீரம் அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, குறித்த சரீரம் அன்றைய தினம் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாணந்துறை வீரசிங்க மாவத்தை சேர்ந்த 93 வயதுடைய பெண்ணின் இறுதிக்கிரியைகளுக்காக அவரது உறவினர்கள் பாணந்துறை வைத்தியசாலைக்கு சென்று குறித்த சரீரம் தொடர்பில் வினவியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சரீரம் அங்கிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...