அதிபர் ஆசிரியர் சங்கங்களுடன் மேலும் பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இணைவு

Date:

அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட மேலும் சில தொழிற்சங்கங்கள் இணைந்து கொழும்பில் இன்று 12 (வியாழக்கிழமை) சத்தியாக்கிரகப் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.

ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் எனக்கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் இலங்கை வங்கி சேவையாளர் சங்கம். அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட மேலும் பல தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இணைந்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் அதிபர் சங்கங்கள், இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி முன்னெடுத்துவரும் போராட்டம் 31ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...