முக்கிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தன.
எனினும் அதற்கான சரியான நேரம் தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலேயே முக்கிய அமைச்சர்கள் சிலரை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, தினேஸ் குணவர்த்தன, ஜீ.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல்ல, டளஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய அமைச்சர்கள் இவ்வாறு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.