ஆப்கானில் ஏற்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தையடுத்து தாலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியதால் கடும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகள் தாலிபான் அரசுக்கு நிதியாதாரங்களை நிறுத்தி விட்டன. ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 7 லட்சத்துக்கும் அதிமானோர் ஆப்கானுக்குத் திரும்பி வந்தனர்.அவர்கள் அவசரமான மனித நேய உதவியை எதிர்நோக்கியுள்ளனர் என்று ஐநா.சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பான OCHA தெரிவித்துள்ளது.
சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் உணவுக்கு பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஐநா.சபை கவலை தெரிவித்துள்ளது.