இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒட்சிசனின் அளவு எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது என விஷேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இரவு வரையில் அவசர சிகிச்சை பிரிவுகளில் கொவிட் தொற்றாளர்கள் 188 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நோயாளர்களுக்காக ஒரு நாளைக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.