இளைஞர்களுக்கு சமமான அரசியல் வகிபாகம் கிடைக்கின்றதா?

Date:

எமது சமூகத்தின் மாற்றம் கரடி கண்ட கனவு போல் ஆகிவிடக்கூடாது என்ற அவாவோடு உங்கள் முன் ஒரு இளைஞனாக, இந்த ஆக்கத்தை வழங்குகின்றேன்.

இலங்கை வாழ் சமூகம் காலந்தோரும் ஒவ்வொரு ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து வருகின்றது. ஆனால் எந்த மாற்றமும் அடையாத நிலையாகவே காணப்படுகின்றது.பழமை வாய்ந்த கோட்பாடுகள் மூலம் பழைய காலங்களில் பிரயோசனமாக இருந்தது. ஆனால் இன்று புதுமையே புத்துணர்வு என்று உணரும் காலத்திலும் கூட பழமையையை கடைபிடித்து வருகின்றோம். இதற்கு உதாரணமாக இலங்கை பாராளுமன்றத்தை  எடுத்துக் கொண்டால்  தனி மனித மாற்றம் , குறித்த சமூகத்தின் மாற்றம், ஒரு நாட்டின் மாற்றம் என்ற எடுகோளின் அடிப்படையில் அரசியல்வாதிகள் மாற்றத்தை கொண்டுவராதவரைக்கும் சமூகம் ஊதாரியாகவே காணப்படும்.

நாட்டினை முன்னேற்றுவதற்கு இளைஞர்களுக்கும் வாய்ப்பினை பங்கீடு செய்யுங்கள். இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர் என்ற பழமைவாய்ந்த கோட்பாட்டினை மாற்றிவிட்டு இன்றைய இளைஞர்கள் இன்றைய சமுதாயத்துக்கான தலைவர்கள் என்ற மாற்றத்தை கொண்டுவாருங்கள். இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் 45 வயதிற்கு பின் பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற சட்டத்தை உருவாக்குங்கள் நாடு எவ்வாறு முன்னேற்றத்தை அடைகின்றது என்று வியப்புடன் பார்க்க முடியும்.

எமது பள்ளி பருவத்தில் பல நாடுகளை பற்றி அறிந்து கொண்டுள்ளோம் ஆனாலும் ஏன் அதை செயற்பாட்டு அளவில் யாராலும் கொண்டுவர முடியவில்லை என்பதே கேள்விக்குறியாகும்.காரணம் எம்மில் காணப்படும் கலாச்சாரமும் முதியவர்களும் தான் முன்னேற்றத்தை காண்பிப்பார்கள் என்ற மாயே எமது சமூகத்தில் கோல் ஊன்றி காணப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடுகளை முன்னேற்றியது யார்? சற்று வரலாற்றை தூசு தட்டுங்கள் உங்களுக்கு அது சவுக்கடியாக காணப்படும்.

எந்த அரசியலை உதாரணமாக எமது நாட்டில் எடுத்துக்கொண்டாலும் அங்கே ஏற்ற தாழ்வு காணப்படுகின்றது .ஒரு செயற்திறன் மிக்க ஒரு ஆளுமை உள்ள ஒரு மனிதன் என்ற அடிப்படையில் தெரிவு செய்யும் ஒரு சமூகம் எப்போது விமோட்சனம் பெறும் என்ற கேள்வியை உங்கள் மத்தியில் விதைக்கின்றேன்.

“இது முளைத்தால் மரம் இல்லையேல் அது உரம்”

 

தொகுப்பு:எஸ்.எம்.றிஹான்

கப்பல் மற்றும் துறைமுக பிரதியமைச்சர்

இளைஞர் பாராளுமன்றம் – இலங்கை 🇱🇰

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...