உணவு அமைப்புகளை மாற்றுவது, மனித நாகரீகம் மற்றும் இயற்கை ஆரோக்கியத்திற்கான இளைஞர்களின் புத்தாக்கம்” எனும் கருப்பொருளில் கொண்டாடப்படும் 2021 சர்வதேச இளைஞர் தினம் இன்றாகும்.இத் தினத்தை முன்னிட்டு இவ்வாக்கம் பிரசுரிக்கப்படுகின்றது.
தொகுப்பு: ஏ.ஜி.நளீர் அஹமட்.
சர்வதேச இளைஞர் தினம் இன்றாகும்.ஐநாவின் விஷேட பரிந்துரையின் பெயரில் வருடாந்தம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட கருப்பொருளை இலக்காக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. “உணவு அமைப்புகளை மாற்றுவது: மனித நாகரீகம் மற்றும் இயற்கை ஆரோக்கியத்திற்கான இளைஞர்களின் புத்தாக்கம்” எனும் கருப்பொருளில் 2021 இளைஞர் தினம் இன்று(12) கொண்டாடப் படுகிறது.பொதுவான ஓர் பார்வையை முன்வைப்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.
கொரோனா பேரழிவால் உலகம் எதிர்பாராத பல்பக்க சவால்களை எதிர் நோக்கி வரும் நிலையில் குறிப்பாக மாணவர்கள் இளைஞர்களின் கல்வி அதனோடினைந்த கற்கைகள் ரீதியான சகல பரீட்சைகளுக்கு பூரணத்துவம் இல்லாத நிலையில் முகம் கொடுத்த வன்னமுள்ளனர். நடைமுறை ஏற்ப்பாடுகளுக்காக இணைய வழிக் கற்றல் நடவடிக்கைகளுக்கு கல்வியலாளர்களும் அரசாங்கங்களும் சென்றாலும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பெரும் தொகை இளைஞர்கள் சவால்களை எதிர் நோக்குகின்றனர்.
மறுபுறம் கோவிட் பரவல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தடுப்பூசி விடயத்திலும் மாணவ இளைஞர் சமூகம் பெரும்பாலான நாடுகளில் சவால்களை எதிர் நோக்கி வருகின்றனர்.நாடுகளின் நிதித் தட்டுப்பாடு,செலவீனங்கள் காரணமாக இத் தரப்பினரை பிற்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. என்றாலும் இயலுமை தன்மைக்கு ஏற்ப அந்தந்த நாடுகள் தமது இளைய சமூகத்திற்கு தடுப்பூசிகளை வழங்குவதை பாராட்டாமல் இருக்கவும் முடியாது.
கோவிட் நிலைமைகளால் குறிப்பிட்ட இளைஞர் சமூகம் தமது வேலைவாய்ப்பை இழந்துள்ளது. இலங்கையிலும் இந் நிலை நீடிக்கிறது.
சமீபத்தில் தேர்தல் திணைக்களம் சுட்டிக்காட்டியது போல் வாக்காளர் பதிவு மாத்திரமின்றி நகர்புர இளைஞர்களின் வாக்களிப்பு வீதத்திலும் குறிப்பிடதக்க விதத்தில் குறைவு தன்மையை தசாப்த காலமாக தேர்தல்கள் திணைக்கள மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு முகவர் அமைப்புக்களின் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.இனத்துவ ரீதியாக தமிழ் சமூக இளைஞர்கள்,மலையக இளைஞர்களின் வாக்களிப்பு வீதத்தில் குறைவு தன்மையை காட்டுகிறது.இளைஞர்களின் வாக்களிப்பில் கொள்கை நோக்கம் அதிகரிக்கும் போக்கை மறுப்பதிற்கில்லை,அது சகல தேர்தல்களிலும் அரசியல் பகுப்பாய்வு ரீதியாக வலுப்பொற வேண்டும்.மறுபுறம் அரசியல் பற்றிய கலந்துரையாடல்களில் பொதுசன அபிப்பிராயம்,ஆர்பாட்டங்களில்,
பஷிகரிப்புக்களில் விடய விவகாரம் குறித்த மேலேலுந்த விதமான விழிப்பு நிலையில் விரும்பியே விரும்பாமலே நகர்புர இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.46 வீதமான கிராமப்புர இளைஞர்களும்,32 வீதமான நகர்புர இளைஞர்களும் கட்சி அரசியலில் ஈடுபடுகின்றனர். அதேபால் இளைஞர்களோடு தொடர்பான அரசியல்,சமூக பிரச்சிணைகளின் போது முற்றுமுழுவதுமாகவே பங்கேற்காத ஆர்வம் அற்ற இளைஞர் தொகுதியினரும், மறுபுறம் குறிப்பிடத்தக்க யுவதிகளும், நகர் புற இளைஞர்களும் தங்கள் அழிக்கும் வாக்குகளினாலும்,தங்களின் அரசியல் பங்கோற்பினாலும் மாற்றம் ஏதும் ஏற்படாத ஓர் வெறுமை நிலையை உணர்கின்ற பிரிவினரும் இருக்கின்றனர்.மேலும் இந்நாட்டின் நீதித்துறை,சிவில் சேவை மற்றும் அரசாங்ககளின் பருவகால ஆணைக்குழுக்களில் நம்பிக்கையீனம் கொண்ட இளைஞர்களும் இருக்கின்றனர்.
மத்திய அரசின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு மாகாண அரசுகளுக்கு போதியளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கூடியளவு சுயாட்சி உணர்வு நிலையில் புவியில் ரீதியாக வட கிழக்கு தமிழ் இளைஞர்கள் விரும்புகின்ற ஓர் நிலையும் இருக்கிறது.
ஆனாலும் கட்சி அரசியலில் ஆர்வம் இல்லாவிடினும் அரசியல் விவகாரங்களில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அரசியலுக்குப் பொருத்தப்பாடுடைய சமூக விவகாரங்களில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவது எவ்வாறு என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.சமூகங்களின் முன்னேக்கிய நகர்வுகளுக்கும்,ஜனநாயக பங்கோற்ப்பிற்கும், தேசிய இலக்குகளை அடைந்து கொள்வதற்குமான பயனுறுதி வாய்ந்த பங்களிப்பாக இது அமையும்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற வகையிலும்,ஜனநாயக சமூக வாழ்வியல் முறைக்கு முயற்சிக்கும் நாடு என்ற வகையிலும்,பொருளாதார தன்னிறைவுக்கு முதலீட்டு வாய்ப்புகளை சர்வதேசத்திடம் மிக ஆர்வத்துடன் எதிர்பார்கும் நாடு என்ற வகையிலும், இனத்துவ,மொழி ரீதியாக சிந்திக்கின்ற,செயலாற்றுகின்ற இளைஞர் தொகுதியை தேசத்தின் நிலைத்திருக்கும் சமூக நலனை அடைவாக் கொண்டு அதிலிருந்து மீட்டெடுப்பதென்பது ஜனநாயகத்திற்கான பரந்த சவாலாகப் பார்க்கிறோம். சிக்கல் தன்மையை ஏற்படுத்தக்கூடிய உணர் திறனிலிருந்து இளைஞர்கள் மீண்டு முன்நேக்கி செல்ல முடியுமான பொது வெளிகள் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்.தீவிரமாக செயற்பட வேண்டும்.
இந்நாட்டிலுள்ள வளங்களை,திறந்த வெளிகளை,செல்வாக்குச் செலுத்த முடியுமான முறைமைகளை,கட்டமைப்புகளை,
தொடர்பாடல் வலையமப்புகளை இளைஞர்கள் இணங்கான வேண்டும்.அதே போல் இந்நாட்டின் தேசிய வலுவை சக்திப்படுத்தும் மூலேபாய நலன்களை வென்றொடுக்கும் பிராந்திய,சர்வதேச வாய்புகளை இணங்கன்டு பலமான ஒழுங்கமைப்புகளை ஏற்படுத்தும் செயற்பாட்டிலும் இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும்.அது கல்வி,சுகாதாரம்,சமூக மேம்பாடு,அரசியல்,கலாசார அடையாளங்கள்,விளையாட்டு,உணவு முறைகள் என்று பயன்பெறத்தக்க விடயங்கள் எதுவாகவும் அமையலாம்.
அதுதான் ஓர் நாட்டின்,ஓர் சமூகத்தின் பொது இராஜதந்திரத்தை சக்திப்படுத்தும் அம்சமாகவும் பார்க்கப்படுறிது.சர்வதேச உறவுகளில் கூட ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளை ஸ்திரப்படுத்தும் திசை மாற்றங்களை ஏற்படுத்தும் உளவியலாக இந்த பொது இராஜதந்திரம் தான் கையாளப்படுகிறது.ஏனெனில் பொது இராஜதந்திரத்தின் மூலமாகத்தான் ஒரு நாட்டின்,ஒரு சமூகத்தின் மென் வலு கட்டியெழுப்பப்டுகிறது.இந்த விடயத்தில் பெரும்பான்மை
சிறுபான்மைச் சமூகங்கள்,இனக்குழுக்கள் உள்ளாந்த ரீதியில் தங்களின் ஒன்றினைந்த மென் வலுவை சக்திப்படுத்தும் உபாயங்கள் குறித்தும் சிந்திக்கும் அதே வேளை அனைத்துச் சமூகங்களும் இனைந்து இலங்கைக்குரிய பொது இராஜதந்திரத்தை சர்வதேச ரீதியாக கட்டியெழுப்பும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.புலம்பெயர் சமூகங்களை குறிப்பாக புலம்பெயர் இளைஞர்களை எவ்வாறு இந்த பொறிமுறையில் தொடர்புபடுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.
தேசிய அரசியல் அல்லது கட்சி அரசியல் போரார்வ முன்மெழிவுகளிலிருந்து முதலில் விலக வேண்டும்.அது தேர்தல் காலமாக இருக்கலாம் அல்லது ஏனைய சட்ட ஏற்பாட்டுச் சுழலாக,அசாதாரண சுழலாக இருக்கலாம்.போரார்வங்கள் ஒரு நாட்டின் ,ஒரு சமூகத்தின் இருப்பின் ஸ்திரத்தின் வலுவாக்கத்தை தீர்மானிக்காது.அது ஒரு சமூகத்தின் மூலோபாய நலனாக ஒருபோதும் அமைய முடியாது.தேச நலனை இலக்காக்க கொண்டு கட்சி அரசியலின் இயக்காற்றலை தீர்மானிப்பதாக முன்மெழிவுகள்,அரசியல் நிலைப்பாடுகள்,அரசாங்கத்தில் அரசியல் ஆதிக்கம்,அரசாங்கத்தின் உள்ளக அரசியலிலும் அமைய வேண்டும்.
சமூக விழிப்பியலை ஏற்படுத்துவதில் கட்சி அரசியல் தொடர்ச்சியாக தோல்வியுற்றிருக்கிறது.தேசிய கட்சிகளின் “அரசியல் செயல்நேக்கம்” என்ன என்பது பற்றி குடிமக்கள் சமூகம் விளிப்பாக இருக்க வேண்டும்.மூடிய நிலைக்குள் மூலேபாயம் வகுப்பது ஜனநாயக விழுமியமல்ல.இதிலிருந்து வெளிவர வேண்டும். தேசிய அரசியல் அல்லது கட்சி அரசியல் “மூலேபாய அரசியல் தொடர்பாடல் பொறிமுறை” பற்றி சிந்திக்கவேண்டும்.
இளைஞர்களைக் கொண்ட சிவில் சமூகம் தமது தேசிய வலுவை இன்னும் அதிகரிக்க வேண்டும். சார்ப்புத்தன்மையினை உள்ளார்ந்த ரீதியில் வலுப்படுத்தும் முறைமைகள் பற்றி திட்டமிட வேண்டும்.
உள்ளுராட்சி மன்றங்கள்,மாகாணங்களின் பயனுறுதியை மிகப் பொருத்தமான முறையில் கொள்கை வகுப்புச்செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்குள்ள ஆற்றல்கள் மீதுதான் தங்கியுள்ளது.இது குறித்து அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய பல்வேறு மட்டங்களைக் கொண்ட அரசியலின் இயக்காற்றலை புரிந்துகொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும்.அரசியல் கட்சிகளின் “செயற்பாட்டு இயல்பை” புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். “திறந்த இயல்பு” செயற்பாட்டை நோக்கி அரசியல் கட்சிகளை நகர்த்த வேண்டும்.
எதிர்காலத்தில் இந்நாட்டு சகல மக்களினதும் பொது அரசியல் கலாச்சாரக் கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு இளைய சமூகத்தவர்களுக்கேவுள்ளது. அரசியல் கட்சிகளின் சமூக கொள்கைகளை குறிப்பாக கல்வி,சுகாதாரம்,பயனுறுதிவாய்ந்த ஒழுங்குபடுத்தப்பட்ட பௌதீக உட்கட்டமைப்பு என்பவற்றில் எந்தளவு “தர நியமங்களை” வழங்குவதில் கவனம் செலுத்துகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும்.ஊழலற்ற கட்டுமானங்களில் இளைஞர்கள் கவனக் குவிப்பைச் செலுத்த வேண்டும்.
உள்ளுராட்சி மன்றம், மாகாண ஆட்சி மற்றும் மத்திய ஆட்சிகளில் நம்பத் தகுந்ததான முன்னெடுப்புகளின் தேவை தொடர்பில் ஒரு முக்கியமான மாற்றத்தை நோக்கி இளைஞர் சமூகத்தின் அரசியல் நகர வேண்டும்.
பல் தேசிய அரசில், அரசியல் பங்கேற்புச் செய்யும் போது நெகிழும் நெகிழா, மாறும் மாறா அரசியல் நல இலக்குகள் எவ்வாறு அமையப் பொற வேண்டும் என்பது பற்றி புரிந்து கொள்ளல் இளைய சமூகங்களுக்கு முதன்மை அம்சமாகிறது.இளைஞர் யுவதிகள் சமூகத்தின் இருப்பை ஸ்திரப்படுத்தும் காரணிகளை வலுவிலக்கச் செய்யும் அக புற அரசியல்,சட்ட ஏற்பாட்டு விடயங்களில் கட்சிகள் கைவைக்கிறதா என்பதில் உண்னிப்பாக இருக்க வேண்டும்.
அதேபோல் நாட்டின் அரசியல் சுழல் அன்மைக்காலமாக புதிய மாற்றம் ஒன்றை நோக்கி நகர்கிறது.இதில் இளைஞர் அரசியலின் அர்த்தமுள்ள வகிபாகம் குறித்து அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.ஜனநாயக இருப்பை பாதுகாத்துத்க் கொடுப்பது பிரதான கட்சிகளின் பொறுப்பாகும்.அரசியல் ரீதியான சமூகவியல் பார்வையை விரிவுபடுத்த வேண்டும்.வளர்ச்சி பெற்ற சமூக ஒழுங்குகள் குறித்தும் இளைஞர்கள் நோக்க வேண்டும்.
இளைய சமூகம் யாப்பு விடயத்தில் எவ்வளவு தூரம் ஆரேக்கியமான கருத்துக்களை முன்வைத்திருக்கிறது என்ற விடயத்தில் ஏமாற்ற நிலையே தொடர்கிறது.இளைய சமூகம் இணைந்து ஒருமித்த கருத்தை முன்வைத்ததாக தொரியவில்லை. இன்றிருக்கும் தலைமுறையினரையும், எதிர்கால தலைமுறையினரையும் ஆளுவதற்கான அடிப்படை விடயங்களை சட்டத்திற்காக முன்மொழியும் விடயம் .சிவில் சமூகம் விழிப்பாக இருந்தாலும் அதிகாரம் கொண்டவர்கள் ஆக்கபூர்வமாக செயற்பட்டு சமூக உரிமைகளை வேன்றெடுக்க வேண்டும்.
நாட்டின் பொது விடயங்களில் அரசியல் செல்வாக்குச் செலுத்தக்கூடாது. ஜக்கியமான தீர்வுகள் முக்கியம்.
குறிப்பாக கடந்த தசாப்தங்களாக பௌதீக கட்டுமானங்களுக்குப்பால் இளையோர், அரசியல் செயற்பாடுகள் மூலம் அடைந்த சமூக, பொருளாதார அடைவுகள் என்ன என்பது பற்றி ஆழமாக நோக்கவேண்டும். இன்று இந்நாடு இந்நாட்டுக்குரிய இயலுமைகளுடன் முன்னகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.இளையோர் சமூகம் தனது இயலுமையை கூட்டாக கட்டியெழுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் இருக்கின்றனர்.
சிவில் சமூக செயற்பாடுகளை அரசியல் பகுப்பாய்வு ரீதியாக வேறுபடுத்தி உறுதியான சமூக, அரசியல், பொருளாதார கொள்கைகளுடன் சமூகத்தை சக்திப்படுத்தும் செயற்பாட்டை இளம் அரசியல் பிரமுகர்கள் கொண்டிருக்கிருக்க வேண்டும். அதிகாரத்தை திடப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஓன்றினைந்த அரசியல் கட்டமைப்புபொன்று நடைமுறையில் தேவைப்படும் காலம்.
மீண்டும் மீண்டும் இணத்துவ ரீதியான பாத்திர எதிர்பார்ப்புகள் நிகழாமைக்கான சுழலை சாத்தியப்டுத்த வேண்டும்.அதற்கான ஏற்பாடுகளை தொட வேண்டும்.
இலங்கையில் நிலவும் இனத்துவ, மத கலாசார மற்றும் மொழிகள் வோறுபாடுகள், பல்கலாசார அலகு,பொதுவாக இலங்கையின் கலாச்சாரத்திற்கு கட்டாயமாக கைவிட முடியாத ஒரு பகுதியாக நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாராபட்ச கவனிப்பு உருவாகுவதை நீக்குவதற்கான சாதகமான ஜனநாயக விழுமியங்கள்,சமூக நீதி மற்றும் அடிப்படை மனித உரிமைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூக முறைமையை எதிர்கால தலைமுறைக்காக மீளக்கட்யெழுப்ப கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
ஜனநாயக கட்டமைப்புக்குள் தங்கள் உரிமைகளை மூலேபாய நலன்களுடன் எவ்வாறு சக்திப்படுத்துவது என்று இளைஞர்கள், இளைஞர் அமைப்புகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.பிற்போக்குத் தன்மையுள்ள தேசியவாத சிங்கள, தமிழ்,முஸ்லிம் குழுமங்கள் இந்நாட்டின் நல்லிணக்கத்தை மலினப்படுத்தும் நிலையில் பிரிபடாத நாடென்றுக்குள் பல்வேறு இனக்குழமங்கள் வாளமுடியுமான சுழலை ஏற்படுத்தவதற்கான வளமாக இளைஞர் தலைமைகள் செயற்படவேண்டிய கட்டாய காலமிது.நாட்டின் போனலை பாதுகாப்பது முதன்மையானது.இது தான் காலத்தால் இளைஞர்களின் தேசிய பங்களிப்பாக அமையும் என நினைக்கிறேன்.
தீர்வை வேண்டி நிற்கும் மாறும் தருனம் என்ற வகையில் புதிய இலங்கையை கட்டமைக்கும் சந்தர்ப்பத்தின் முழுமையான ஆற்றலை தவறவிடக்கூடாது என்ற போக்கில் அரசாங்கம் சிந்திப்பதாக தெரியவில்லை.ஆனாலும் இளைஞர்களின் உரிமைகளை இரண்டாம் நிலை வகிபாகமென்றுக்கு இட்டுச்செல்லாமல் இருக்கும் விடயத்தில் அரசியல் கட்சிகள் கவனக்குவிப்பை செலுத்த வேண்டும்.
அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கும்,மனித உரிமைகள்,சமமான வாய்ப்பிற்கும் இடையிலான அபிவிருத்திக்கு சட்டம் சார்ந்த சட்டக அமைப்பொன்றின் தோவையை வேண்டி நிற்கிறது.
நாளைய தலைவர்களான இளைஞர்களை சமூக, தேசிய விடயங்களில் இன்றைய பங்காளர்களாக மாற்றுவதற்கு அரசாங்கங்களும், அரசியல் கட்சிகளும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும். கொள்கை உருவாக்க செயன்முறைகளில் தங்கள் உள்ளீடுகளை உரிய தரப்புக்கு வழங்க வேண்டும். சமூகங்களுக்கிடையே மிகப்பலமான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.பிற்போக்குத் தன்மையுள்ள தேசிய வாதத்தை தேற்கடித்து இலங்கைகேவுரிய தேசிய வாதத்தின் புதிய பரிமாணம் குறித்து இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். சட்டம், பொது ஓழுங்குகளை வலுப்படுத்துவதோடு நாட்டின் நல்ல விடயங்களை இளைஞர்கள் இணம் காட்ட வேண்டும். தமது கலாச்சார அடயாங்களை பேணிக்கொள்வதற்கான வரம்பெல்லைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது.பொறுப்பு மிக்கவர்களாக நடந்து கொள்ள உணர்வுட்டப்பட வேண்டும்.குடியியல் உணர்வு இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும்.சமூகங்களின் பரந்த சவால்களுக்கு தீர்வுகளை கானும் வகையில் வலுவூட்ட வேண்டும்.
ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவுகளை இளைஞர்கள் முன்வைக்க வேண்டும். தேசிய முறைமைகளுக்குள் இளைஞர்கள் வரவேண்டும்.ஜனநாயக ஆளுகைகளுக்குள் இளைஞர்கள் வர வேண்டும். ஜனநாயகத்திற்கான பரந்த பேராட்டமாக அமைய வேண்டும்.ஜனநாயக விரேத செயற்பாட்டுணர்வை இளைஞர்கள் தேர்கடிக்க வேண்டும். தேசத்தின் தேவையை பூர்த்தி செய்யும் இளைஞர்களாக பனியாற்ற வேணடும்.கொள்கை ரீதியாகவே,செயற்பாட்டு ரீதியாகவே தேசிய விவகாரங்களில் பொது இலக்குகளை அடைந்து கொள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும். பாரம்பரியங்களுடன் நாட்டைப் பிளவுபடுத்திய வேற்றுமைகளை அடுத்த தலைமுறையினருக்கும் கையளிக்கும் நிலையை தவிர்ப்போம். நாளைய ஜனநாயகத்திற்கான இன்றைய இளைஞர்களின் பணியாக இது அமையட்டும்.
இந் நாட்டு இளைஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்ப்படுத்திக் கொடுத்துள்ளதை மறுப்பதற்கில்லை.என்றாலும் முற்போக்கு ரீதியான முன்நகர்விற்கு ஜனநாயக பங்கேற்பிற்கான வாயில்களைத் திறந்து வைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
ஏலவே 1980 ஆம் ஆண்டு இளைஞர் ஆணைக்குழு பரிந்துரைத்த இளைஞர்களின் விரக்தி நிலைக்கான காரணங்கள் இன்றும் தொடர்வதால் அதனைக் கருத்திற் கொண்டு அதனை சமகாலத்திற்கு ஏற்ப மேம்படுத்தி அதன் பிரகாரம் நடைமுறைகளை பிரயோகப்படுத்த கட்சி அரசியலுக்கப்பால் சகல தரப்பும் ஒன்றினைய வேண்டும்.
இளைஞர்களுக்கான சமமான வாய்ப்புகளுக்கான சட்ட ஏற்ப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.இளைஞர்களின் அரசியல் பங்கேற்புக்கான மென் திறனை வளர்க்கவும் கொள்கை ரீதியான அரசியலை முன்னெடுக்கும் ஆற்றலை நிலைப்படுத்தவும் அரசியல் கட்சிகள் நவீன முற்போக்கு பயிற்களை வழங்குவதற்கான ஏற்ப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச பங்கேற்புக்கான இணைப்புகளை இனம் காட்டிக் கொடுக்க வேண்டும். பொருளாதார வர்த்தக ஆற்றலை எவ்வாறு இளைஞர் சமூகத்தில் ஆரோக்கியமாக கட்டியொழுப்பி தேசிய நலனை மேம்படுத்தலாம் என்பது பற்றி அரசியல் கட்சிகளின் கொள்கை வகுப்பாளர்கள் சிந்தக்க வேண்டும்.
பரந்த வாய்ப்புகளும் பங்கேற்பிற்கான அங்கீகாரங்களும் தான் இளைஞர்களின் ஆற்றலை சக்திப்படுத்தும் ஆற்றல்களாகும். தூரம் ஒதுக்கும், அங்கீகாரம் வழங்காத எண்ணப்பாடுகள் இளைஞர்களின் ஆற்றலை குறுகிய பார்வைகளுக்கும் அடைவுகளைப் பெற்றுத் தராத செயற்ப்பாடுகளுக்குமான வாயில்களைத் திறந்து விடும் என்பதை கட்சி அரசியல் செயற்ப்பாட்டாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையின் எதிர் காலத்தை கட்டமைக்கும் ஆற்றலை மேம்படுத்த முற்போக்குத் தேசிய வாதத்தை போஷித்து தேசத்தைக் கட்டியொழுப்ப இன்றைய இளைஞர்களுக்கு கைகொடுக்க வேண்டியது தற்போதைய சகல தரப்பினதும் கூட்டுப் பொறுப்பாகும். இலங்கையின் மூலோபாய அமைவிடத்திலிருந்து பிராந்திய சர்வதேசத்தை கையாளும்,அதனை வெல்லும் ஆற்றல் நடுநிலையாக சிந்துக்கும் இளைஞர்களாலயே எதிர் காலத்தில் சாத்தியமாகும் என்பது யதார்த்தமாகும்.ஆகவே தமது அரசியல் அதிகார இருப்பிற்காக கட்டமைக்கும் சந்தர்ப்பவாத மத இன பாராபட்ச வாதங்களை இளைய தலைமுறையினர் தோற்கடிக்க வேண்டும். அப்போதே இலங்கை உள்ளக அபிமானத்தின் ஆற்றல் மேலோங்கும்.