கத்தோலிக்க தேவாலயங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கறுப்புக்கொடி போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2019 ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயலற்ற தன்மைக்கு எதிராக நாளை(21) இப்போராட்டம் நடைபெறவுள்ளது.
கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஹேஷன் ஜயவர்தன அனைத்துப் பிரஜைகளும் கத்தோலிக்க தேவாலயங்களில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
முன்னதாக கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயலற்ற தன்மைக்கு எதிராக நாளை கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த முன்வருமாறு கத்தோலிக்க சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.