ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள நாடுகள், வரும் செப்டம்பர் இறுதி வரையாவது 3 ஆவது பூஸ்டர் டோசை போடுவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்டா மரபணு மாற்ற வைரஸ் வேகமாக பரவுவதால், இரண்டு டோஸ் போட்டாலும் மேலும் ஒரு பூஸ்டர் டோசை போட வளர்ந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. ஆனால் பல ஏழை நாடுகளில் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசியே போடப்படாத நிலை உள்ளது.
எனவே எல்லா நாடுகளிலும் மக்கள் தொகையில் குறைந்தது 10 சதவிகிதம் பேருக்காவது தடுப்பூசி கிடைக்கும் வகையில் 3 வது டோசை நிறுத்தி வைக்க உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரிஷியஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.