கொவிட் தடுப்பூசியின் முதற்கட்ட ஊசி மருந்தினை இதுவரை பெற்றுக் கொள்ளாத மேல் மாகாணத்தின் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் கடுமையான நோய் நிலமைகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) முதல் மூன்று நாட்களுக்கு
தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்,1906 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்களுடைய பெயரினை பதிவு செய்து
கொள்ளவும். கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சரியான தீர்வு தடுப்பூசி செலுத்திக் கொள்வதேயாகும்.