சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் குறித்து காவல்துறை விசாரணை!

Date:

கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என காவல்துறை தெரிவித்துள்ளது.

 

காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

 

வெள்ளவத்தை, தெஹிவளை, நுகேகொடை, கல்கிசை மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளில் இந்த குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவிருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.எவ்வாறாயினும், அவ்வாறு வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பில், கல்கிசை காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...