தடுப்பூசி தொடர்பில் இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு!

Date:

கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவுள்ள பொதுமக்கள் தங்களுடைய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் மாத்திரம் அதனை பெற்றுக் கொள்ளுமாறு கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு பிரதேசத்திற்கும், பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளே வழங்கப்பட்டுள்ளதால், மக்கள் தமது சொந்தப் பிரதேசங்களில் மாத்திரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் பல தடுப்பூசி நிலையங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார்.கொழும்பு மாவட்டத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாத்திரம் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்கா மற்றும் தியத உயனவில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி நிலையங்களில் தங்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...