தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா? இராஜாங்க அமைச்சர் விளக்கம்!

Date:

நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அதிகபட்சமாக 14 நாட்களுக்கு அப்பால் செல்லாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து நேற்று (21) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தற்போது அமுலாக்கப்பட்டுள்ள 10 நாட்கள் முடக்கல் நிலைக்காகத்தான், 2,000 ரூபா வழங்கப்படுகிறது.கடந்த காலங்களில் ஒரு மாதத்திற்காகத்தான் 5,000 ரூபா வழங்கப்பட்டது.

எனவே, தற்போது 10 நாட்களுக்கு அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 அல்லது 5 நாட்களுக்கு நீடிக்குமா என்பது தமக்குத் தெரியாது என்றும், எனினும், நிச்சயமாக அதிகபட்சமாக 14 நாட்களுக்கு அப்பால் இந்த நிலை தொடராது எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் 5000 ரூபா வழங்கப்பட்டவர்களுக்காக, அதிகபட்சமாக 14 நாட்களுக்காக 2,000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.2,000 ரூபா போதாது என்ற போதிலும், எவ்வளவாவது தொகையை வழங்க வேண்டும்.2,000 ரூபா வழங்குகின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் நிதிநிலை சிறப்பாக இல்லை.இந்த விடயத்தில் மக்களுக்கு உண்மையைக்கூற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...