தபால் மூலமாக கிளினிக் மருந்துகளை வழங்க நடவடிக்கை

Date:

நாட்டில் தற்போது வீரியமாக பரவிக்கொண்டிருக்கும் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக அரசாங்க மருத்துவமனைகளின் கிளினிக்குகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தபால் மூலம் தேவையான மருந்துகளை வழங்குவதற்கான கூட்டுத் திட்டத்தை சுகாதார அமைச்சும் அஞ்சல் திணைக்களமும் மீண்டும் தொடங்கியுள்ளன.
மருந்துகள் தேவைப்படும் நோயாளிகள் கிளினிக் செல்லும் மருத்துவமனைக்கு அழைத்து தேவையான தகவல்களை வழங்கி மருந்துகளை வீட்டுக்குப் பெறலாம் என்று சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் சம்பிக்க விக்கிரமசிங்க நேற்று (25) தெரிவித்தார்.
அழைப்பு மூலம் வழங்கப்பட்ட தகவல்களின்படி, நோயாளிகளின் வீடுகளுக்கு மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார். சிங்கள மொழியில் 072 0720720 மற்றும் தமிழில் 072 0606060 என்ற தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதிப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். கொவிட் முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது, ​​சுகாதார அமைச்சு அஞ்சல் திணைக் களத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயற்படுத்தியது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...