துருக்கியில் காட்டுத்தீ! | உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

Date:

துருக்கியில் பரவிவரும் காட்டுத்தீயில்  தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்த பின்னர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த புதன்கிழமை முதல் ஏற்பட்ட தீ, கிராமங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை ஆக்கிரமித்து மக்களை வெறியேற்றுவதற்கும் கட்டாயப்படுத்தியுள்ளது.

மேலும், இதனால் மனாவ்காட்டில் குறைந்தது ஐந்து பேரும் மர்மாரிஸில் ஒருவரும் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனவ்காட்டில் ஏற்பட்ட தீவிபத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இன்னும் 10 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார்.

மர்மாரிஸில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட 159 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் துக்கிய ஜனாதிபதி எர்டோகன் சனிக்கிழமை ஹெலிகொப்டர் மூலமாக தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

எர்டோகன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை “பேரிடர் பகுதிகள்” என்று ருவிட்டர் தளத்தில்ப் பதிவிட்டுள்ளார்.

“எங்கள் தேசத்தின் காயங்களை ஆற்றவும், அதன் இழப்புகளை ஈடுசெய்யவும், அதன் வாய்ப்புகளை மேம்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...