சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக நாளை முதல் ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள், ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
லங்கா சீனி நிறுவனத்தின் ஊடாகவும் சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாகவும் சீனியை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது சகல சதொச விற்பனை நிலையங்களுக்கும் சீனியை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.