பிறரது வீடுகளுக்கு போகாமல் இருப்போம்!

Date:

தொகுப்பு :அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம் பளீல்.

தற்போது கொவிட் நோய் இலங்கையில் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதன் நான்காவது அலை வீசிக் கொண்டிருக்கிறது. வைத்தியசாலைகள் நோயாளிகளாலும் பிரேதங்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் தான் மிக அதிகமாக மரணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தற்காப்பு முயற்சிகளில் கட்டாயமாக ஈடுபட வேண்டும்.

அதன் முதல் கட்டம் நாம் எவருடைய வீடுகளுக்கும் போகக்கூடாது. அவை மிக நெருங்கிய உறவினர்களது வீடுகளாக இருந்தாலும் கூட. மேலும் எமது வீட்டுக்கு மற்றவர்களை அழைக்கவும் கூடாது.

மிக நிர்ப்பந்தமான நிலையில் பிறரது வீடுகளுக்குச் செல்ல நேரிட்டாலும் வெளியிலிருந்து கதைத்து விட்டு மிக அவசரமாக திரும்பி விட வேண்டும்.

ஏனென்றால் யாருடைய உடம்பில் இந்தக் கிருமி தொற்றி இருக்கிறது என்று எவருக்குமே தெரியாது.

வீடுகளது கதவுகளில் அல்லது ‘கேட்’களில் அறிவித்தல் ஒன்றை தொங்கவிட்டால் கூட அது பிழையாகமாட்டாது.

கொரோனா காலத்தில் பிறருடைய வீடுகளுக்கு போகாமல் இருக்க வேண்டும் என்றும் அப்போது கொவிட் பரவுவதை கட்டுப்படுத்தலாம் என்றும் கூறுகின்ற பொழுது எவரும் பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

நெருங்கிய உறவினர்களோடும் அயல் வீட்டாரோடும் நண்பர்களோடும் தொலைபேசி மூலம் உரையாடுவதற்கான வாய்ப்பு இக்காலத்தில் தாராளமாக இருக்கிறது.

எனவே அந்த ஊடகத்தைப் பயன்படுத்தி எமது உறவுகளை தொடர்ந்தும் பாதுகாத்து வருவோம். தேவைகளை கேட்டறிவோம்; சுகதுக்கங்களை விசாரித்துக் கொள்வோம்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...