போக்குவரத்து நடவடிக்கைகளின் போது நெரிசலை ஏற்படுத்தாத வகையில் புகையிரதங்களில் பயணிக்குமாறு புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
சில புகையிரத சேவைகளில் சுகாதார நடைமுறைகள் மீறப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக புகையிரத முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் கடைபிடித்து கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்