இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவை நிகழ்ச்சிகள் வழமையான அலைவரிசைகளில் நாளை முதல் ஒலிபரப்பப்படும். தமிழ் தேசிய சேவை, வர்த்தக சேவை மற்றும் முஸ்லிம் சேவை ஆகியன (102.1, 102.3) FM அலைவரிசைகளில் வழமை போன்று நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் பிரத்தியேக செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
காலை 8 மணி முதல் 10.30 வரையும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையும் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் இந்த அலைவரிசையில் ஒலிபரப்பப்படும்.