ஜோக்கிம் fபெர்ணான்டோ இன்று (17) நண்பகல் 12.40 அளவில் காலமானார்.
இவர் தொடர்பாக மூத்த அறிவிப்பாளரும்,கலைஞருமான பீ.எச்.அப்துல் ஹமீத் எழுதிய குறிப்பு.
.ஜோக்கிம் fபெர்ணான்டோவின் மரணச் செய்தியை சகோதரி நாகபூஷணி மூலம் அறிந்து கொண்டேன்.வயதாலும், வானொலி அனுபவத்தாலும் மூத்தவரான அவரும் நானும் ஒன்றாகவே வானொலி அறிவிப்பாளர்களாகத் தெரிவானோம். மிகச்சிறந்த வானொலிக் கலைஞராக, கல்விச்சேவை, மாதர் பகுதி, தேசியசேவை நாடகங்கள்,உரைச் சித்திரங்கள் என ஏற்கனவே நாம் இருவரும் இணந்து நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கு கொண்டிருந்தாலும், 1967ன் இறுதியில், அறிவிப்பளர்களாகத் தெரிவாகி, ஒன்றாகப் பணியாற்ற ஆரம்பித்த பின்னர்தான் நெருங்கிப் பழகினோம். எவரோடும் முரண்படாமல் தோழமையுடன் பழக அவரால் எப்படி முடிகிறது என பலதடவைகள் நான் ஆச்சரியப்பட்டதுண்டு. வங்கியில் வகித்த நிரந்தரப் பதவியைக்கூட, (சகோதர மொழி கட்டாயமாக்கப்பட்தால்) உதறித் தள்ளிவிட்டு, இறுதிக்காலம் வரை பகுதிநேர அறிவிப்பாளராகவே, வானொலிக்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். எல்லோருக்கும் நல்லவரான என் அருமைச் சகோதரனின் ஆன்மா நற்பேறு அடைய பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.