வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள்!

Date:

புதிய வழிகாட்டல்களின்படி, வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.மேலும், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை, அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக தீர்மானிக்கப்பட்ட ஹோட்டல் அல்லது குறித்த இடத்தில் தங்க வேண்டியது அவசியமாகும்.

அங்கு முழுமையாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை என புதிய வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுக் கொள்ளாத ஒருவர், பரிசோதனை முடிவில் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, அவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்களில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...