2,000 ரூபா கொடுப்பனவை பெறாதவர்கள் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க முடியும்!

Date:

2,000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும், இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்த இதுதொடர்பாக தெரிவிக்கையில் இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதிபெற்றவர்களில் சுமார் 50% மானோருக்கு 2000 ரூபா கொடுப்பனவு செலுத்ததப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவை செலுத்து நடவடிக்கையின், முன்னேற்றம் குறித்து உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்தவுடன் ZOOM தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடினார்.

இந்த கொடுப்பனவை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் செலுத்தி முடிக்குமாறு இராஜாங்க அமைச்சர் மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.18 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவை செலுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...