அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தீடீர் உயர்வு!

Date:

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, ஒரு கிலோ மைசூர் பருப்பு 250 ரூபாவுக்கும், ஒரு கிலோ சீனி 215 ரூபாவுக்கும், ஒரு கிலோ இலங்கை உருளைக்கிழங்கு 300 ரூபாவுக்கும், இந்திய உருளைக்கிழங்கு 240 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 135 ரூபாவுக்கும், சிறிய வெங்காயம் 400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அறியமுடிகிறது.

மொத்த வியாபாரிகள் இவற்றிற்கான விலையை அதிகரித்துள்ளதன் காரணமாக, சீனி, கிழங்கு, வெங்காயம் மற்றும் நெத்திலி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சதொசவில் 115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி நேற்று (25) 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதோடு, மைசூர் பருப்பு கிலோவொன்றின் விலை 250 ரூபா வரை அதிகரித்திருந்தது.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் சதொசவுக்கு ஒரு தொகை வெள்ளை சீனி கிடைக்கவுள்ளதாகவும், இவ்வாறு கிடைத்த பின்னர் தற்போதைய விலையை விடவும் குறைந்த விலையில் மக்களுக்கு சீனியை பெற்றுக்கொள்ள முடியுமென சதொச தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...