கர்ப்பிணித் தாய்மார்கள் தாமதமின்றி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்!

Date:

கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கையில் திருப்திக்கொள்ளக்கூடியதாயில்லை என்று மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

3 மாதங்கள் நிறைவடைந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசியை வழங்குவதற்கான விசேட செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அதன் தலைவர், விசேட வைத்தியர் பிரதீப் சில்வா கூறினார்.

 

இதனடிப்படையில் சுகாதார அதிகாரி அலுவலகம் மற்றும் அனைத்து வைத்தியசாலைகளிலும் கர்ப்பிணி தாய்மாருக்கு தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் அனைத்து கர்ப்பிணி தாய்மாருக்கும் தடுப்பூசி வழங்க அரரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

கொவிட் தொற்று காரணமாக இதுவரை 19 கர்ப்பிணி தாய்மார் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சில கர்ப்பிணி தாய்மார் அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணி தாய்மார் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் எதுவித பிரச்சினையும் இல்லை என்று குடும்ப வைத்திய பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்திரமாலி டீ சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...

சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி

இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம்...

கடும் வெப்பமான வானிலை அடுத்த மாதம் வரை நீடிக்கும்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...