புகழ்பெற்ற கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸி இனி பார்ஸிலனா கால்பந்து கழகத்திற்காக விளையாடமாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பார்ஸிலோனா அணியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸிக்கும், FC பார்ஸிலோனா கால்பந்து கழகத்துக்கு இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது.
எனினும்,நேற்று இரு தரப்பினரும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இருந்த நிலையில், அது இடைநிறுத்தப்பட்டுள்ளது. நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் (ஸ்பானிஷ் லிகா விதிமுறைகள்) காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பார்ஸிலோனா கால்பந்து கழகம் குறிப்பிட்டுள்ளது. லயனல் மெஸ்ஸி இனிமேல் எந்த அணியிலும் இல்லை எனவும், பார்ஸிலோனா கால்பந்து கழகத்துடனான ஒப்பந்தம் காலாவதியானதால் இனி அவர் தனி வீரரானார் எனவும் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LATEST NEWS | Leo #Messi will not continue with FC Barcelona
— FC Barcelona (@FCBarcelona) August 5, 2021