கிண்ணியா கல்வி வலய அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்க இம்ரான் எம்.பி கோரிக்கை

Date:

கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சு செயலாளர் எம்.சீ.எல். பெர்னாண்டோவுக்கு அவர் கையளித்துள்ள கோரிக்கைக் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கிண்ணியா கல்வி வலயத்தில் கடமை புரிந்த கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் இருவர் பதில் உத்தியோகத்தர் இன்றி சமீப காலங்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இங்கு நிர்வாக நடைமுறைகள மேற்கொள்வதில் சிரமங்கள் இருப்பதாக ஐக்கிய கல்வி ஊழியர் சங்கம் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.

66 பாடசாலைகளையும், சுமார் 1300 ஆசிரியர்களையும் கொண்ட இவ்வலயத்தில் தற்போது வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட 3 கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமை புரிகின்றனர். 10 க்கு மேற்பட்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் வெற்றிடம் இங்கு உள்ளதாக அறிய முடிகின்றது.

இந்நிலையில் கல்வி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இங்கு எதிர் நோக்கப்பட்டு வருகின்றன. எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு இங்கு நிலவும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் பற்றாக்குறை பெருமளவு நிலவுவதாகவும், எனினும் முடியுமானவரை இவ்விடயத்தைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது செயலாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...