ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Date:

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று காலை 11.00 மணி முதல் மீண்டும் அனைத்துப் பொதுச் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று ஏற்பட்ட இந்தக் கணினி அமைப்புக் கோளாறு காரணமாக, இன்றைய தினம் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், இன்று காலை முதல் பெருமளவிலான மக்கள் திணைக்கள வளாகத்தில் திரண்டிருந்ததோடு, அங்கு ஒருவித பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...