கிளிநொச்சியில் பிரதேச சபை ஊழியர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

Date:

கிளிநொச்சியில் சற்று முன்னர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை கிளிநொச்சியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச் சேர்ந்த, 47 வயது மதிக்கத் தக்க விஜயகுமார் என்ற வெளிக்களத் தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி நகரில் திருநகர் வீதியில் அரச நில அளவைத் திணைக்களத்துக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுகாதாரத்தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சாதாரணமாக பணிக்கு வந்தவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சி நிருபர் 

சப்த சங்கரி

Popular

More like this
Related

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...