சமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மை!

Date:

ஹட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று (19) லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றதால் பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை பெற்று சென்றனர்.

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப லிட்ரோ எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.இதனால் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு எரிவாயு கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டுள்ளனர்.லிட்ரோ எரிவாயு சிலிண்டர் குறித்த விற்பனை நிலையத்தில் இன்று விற்கப்படுவதாக அறிந்த நுகர்வோரே இவ்வாறு கூடியிருந்தனர்.

எனினும் எரிவாயு நிறுவனத்தால் இன்று வழங்கப்பட்ட 75 சிலிண்டர்கள் கடைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவற்றை பலருக்கு வழங்க முடியாது போனதாக கேஸ் விற்பனையாளர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...