சிறுபான்மை எம் பிக்களுக்கும் இராஜாங்க அமைச்சு வழங்கப்படுமா? – வெளியானது தகவல்!

Date:

அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட இன்றைய தினம்(16) இராஜாங்க அமைச்சுக்கள் சிலவற்றிற்கும் அமைச்சர்கள் நியமிக்கப்படவிருந்தனர். ஆனால் அது வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு எம் பி ஹாபீஸ் நசீர் மற்றும், வன்னி எம் பி காதர் மஸ்தான் ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகள் வழங்க ஆலோசிக்கப்பட்டிருந்தது. அத்துடன் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ்விற்கும் அமைச்சுப் பொறுப்பொன்றை வழங்க அரச மேல்மட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

ஆனால் முழு அமைச்சரவை மாற்றம் இன்று செய்யப்படாத காரணத்தினால் இவர்களை அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் மட்டக்களப்பு எம் பி சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பொன்று வழங்கப்படவுள்ளது.
அடுத்த வாரங்களில் இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...