நாட்டில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 40 சதவீதத்தால் அதிகரிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை!

Date:

நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட நாளாந்த தொற்றுநோய் அறிக்கைக்கு அமைய நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 40.3% இனால் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 17 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான ஒரு வாரத்தினுள் இலங்கையில், 35, 032 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தென் மற்றும் கிழக்காசிய நாடுகளை உள்ளடக்கியதான இந்த அறிக்கைக்கு அமைய மாலைத்தீவில் புதிய தொற்றாளர்கள் பதிவாகுதலில் 5.2% அதிகரிப்பு ஏற்பட்டுள்ள அதேவேளை, புதிதாக அந்நாட்டில் 822 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு தீமோர் – லெஸ்தே நாட்டில் குறித்த வாரத்தில் புதிதாக 1,651 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அது 59.4% அதிகரிப்பாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, குறித்த வாரத்தினுள் இந்தியாவிலேயே அதிகளவில் (231,658 பேர்) கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும், அது ஒப்பீட்டளவில் 10.3 % வீழ்ச்சியாக குறிப்பிடப்பட்டுள்ளது.அவ்வாறே, கடந்த வாரத்தில் தாய்லாந்தில் புதிதாக 142, 138 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த அதேவேளை, அது அந்நாட்டில் நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர் எண்ணிக்கையில் 5.7% வீழ்ச்சியை காட்டுகிறது.

இந்தோனேஷியாவில் இந்தத் தொகை 33.6% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு அமைய கொவிட் வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் கடந்த வாரத்தினுள் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது.

குறித்த வாரத்தினுள் தென்கிழக்காசிய பிராந்தியத்தினுள் அதிகமான கொவிட் மரணங்கள் இந்தோனேசியாவில் பதிவாகியிருந்தது.

அதற்கமைய, அந்நாட்டில் 8,784 கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்த போதிலும், அது 16% வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.

அவ்வாறே, இந்தியாவினுள் குறித்த வாரத்தினுள் 3,142 கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்த போதிலும் அது 6.6% வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.

எனினும், உலக சுகாதார ஸ்தாபனம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கடந்த 17 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியினுள், இலங்கையில் 1,327 கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் அது 34.7%அதிகரிப்பை காட்டுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் 6 பிராந்தியங்களில்,தென்கிழக்காசியாவிலேயே குறைந்தளவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலைமையில், புதிய தொற்றாளர்கள் பதிவாகின்றமை மற்றும் கொவிட் மரணங்களின் அதிகரிப்பு தொடர்பில் இலங்கை அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதை உலக சுகாதார ஸ்தாபனத்தின் இந்த அறிக்கையினூடாக சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...